Who We Are:


At WTMF, we transcend political affiliations and advocate for fundamental values such as human security, democracy, and pluralism. We firmly believe in upholding the principles outlined in the United Nations charter and adhere to the regulations set forth by international trade union organizations. The WTMF stands united to represent the vibrant and diverse tapestry of Tamil media across the globe.
Furthermore, we are committed to education and empowerment. Through frequent seminars and workshops, we aim to educate both the public and aspiring journalists, particularly in regions where the Tamils have a significant presence, thereby fostering a culture of journalism and media literacy.
WTMF actively engages in collaborative relationships with print, cyberspace, and electronic media institutions, as well as individuals and business communities, both regionally and internationally. Through dissemination of our insights and expertise, including press releases and newsletters published on our website and other relevant media channels, we strive to contribute to the advancement of journalism and freedom of the press globally.

Our Mission

At WTMF, our mission is to

  • Champion freedom of the press and justice through the empowerment of strong, independent trade unions for journalists.
  • Serve as a catalyst for the advancement of Tamil media on a global scale.
  • Empower and connect Tamil media professionals worldwide, providing a collaborative space for networking, sharing ideas, and exploring innovative avenues for media development.
  • Amplify the voice of the Tamil community through our collective efforts, ensuring our rich cultural heritage continues to resonate across borders.
  • Intensify the voice of the Tamil community on a global platform, promote excellence and innovation in Tamil media, and preserve and nurture the Tamil language and culture.

Our Commitment

We believe that a strong and independent Tamil media is essential for the well-being of the Tamil community worldwide.
We are committed to:

  • Advocating for the rights and freedoms of Tamil media professionals.
  • Facilitating collaboration and knowledge sharing among our members.
  • Organizing global conferences and events to promote Tamil media.
  • Providing resources and support to Tamil media organizations.
  • Promoting ethical and responsible journalism in the Tamil media landscape.

Our Community:

The WTMF is a diverse and inclusive organization, reflecting the global nature of the Tamil community.
Our members include:

  • Journalists, writers, and editors from newspapers, magazines, websites, and broadcasters
  • Media owners and operators of radio, television, and digital platforms
  • Academics and researchers specializing in Tamil media and communication
  • Media associations and advocacy groups from around the world

உலகத் தமிழ் ஊடகக் கூட்டமைப்பு என்பது தமிழ் ஊடக வல்லுநர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் உலகளாவிய வலையமைப்பாகும். இந்த அமைப்பானது, உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது.
உலகத் தமிழ் ஊடகக் கூட்டமைப்பில் நாம் அரசியல் சார்புகளைக் கடந்து மனித பாதுகாப்பு, ஜனநாயகம், பன்மைத்துவம் போன்ற அடிப்படை விழுமியங்களுக்காக வாதிடுகிறோம். ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகளை நிலைநிறுத்துவதிலும், பன்னாட்டுத் தொழிற்சங்க அமைப்புகளால் வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உலகத் தமிழ் ஊடகக் கூட்டமைப்பு உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களின் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒன்றுபட்டு நிற்கிறது. மேலும், கல்வி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அடிக்கடி நாங்கள் கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்துவதன் மூலம், பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள பத்திரிகையாளர்களுக்கு, குறிப்பாக தமிழர்கள் கணிசமான இருப்பைக் கொண்ட பிராந்தியங்களில் கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் மூலம் பத்திரிகை மற்றும் ஊடகக் கல்வியறிவுப் பண்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

உலகத் தமிழ் ஊடகக் கூட்டமைப்பின் நோக்கம்

ஊடகவியலாளர்களுக்கான வலுவான, சுயாதீனமான தொழிற்சங்கங்களை வலுவூட்டுவதன் மூலம் பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் நீதிக்காக போராடுதல்.

  • உலக அளவில் தமிழ் ஊடகங்களின் முன்னேற்றத்திற்கு ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்படுவது.
  • உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடக வல்லுநர்களை இணைத்தல் மற்றும் வலுவூட்டுதல், இணைந்து பணியாற்றல், யோசனைகளைப் பகிர்தல் மற்றும் ஊடக வளர்ச்சிக்கான புதுமையான வழிகளைக் கண்டறிதல் ஆகியவற்றிற்கான கூட்டுத் தளத்தை வழங்குதல்.
  • நமது கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் குரலை விரிவுபடுத்தி, நமது வளமான பண்பாட்டுப் பாரம்பரியமானது எல்லைகளைக் கடந்து தொடர்ந்து எதிரொலிப்பதை உறுதி செய்தல்.
  • உலக தளத்தில் தமிழ்ச் சமூகத்தின் குரலைத் தீவிரப்படுத்தி, தமிழ் ஊடகங்களில் உன்னதத்தையும் புதுமையையும் ஊக்குவித்து, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்த்தல்.

எங்கள் அர்ப்பணிப்பு

உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்கு வலுவான மற்றும் சுதந்திரமான தமிழ் ஊடகங்கள் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் கீழ்க்கண்டவைகளைச் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்:

  • தமிழ் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் வாதிடுதல்.
  • நமது உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வுக்கு வசதி செய்தல்.
  • தமிழ் ஊடகங்களை மேம்படுத்த உலகளாவிய மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
  • தமிழ் ஊடக நிறுவனங்களுக்கு மூலவளங்களையும் ஆதரவையும் வழங்குதல்.
  • தமிழ் ஊடகத்துறையில் அறநெறி மற்றும் பொறுப்புணர்வு மிக்க ஊடகவியலை ஊக்குவித்தல்.

எங்கள் சமூகம்

உலகத் தமிழ் ஊடகக் கூட்டமைப்பு என்பது தமிழ்ச் சமூகத்தின் உலகளாவிய தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாகும்.

எங்கள் உறுப்பினர்களில் கீழ் கண்டவர்கள் உள்ளனர்:

  • பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், வலைத்தளங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்.
  • வானொலி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஊடக உரிமையாளர்கள் மற்றும் இயக்குபவர்கள்.
  • தமிழ் ஊடகத்திலும் தொடர்பியலிலும் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.
  • உலகெங்கிலும் உள்ள ஊடக சங்கங்கள் மற்றும் எடுத்துரைப்புக் குழுக்கள் (advocacy groups).
  • தமிழ் ஊடகத்துறையில் அறநெறி மற்றும் பொறுப்புணர்வு மிக்க ஊடகவியலை ஊக்குவித்தல்.